பார்க்கிங் செய்வது தொடர்பான தகராறில் டாக்டர் கார் கண்ணாடி உடைப்பு: கும்பலுக்கு வலை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் பார்க்கிங் செய்வது தொடர்பான தகராறில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் தவ்பிக் (33). டாக்டரான இவர், வீட்டின் கீழ்தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். தனது காரை வீட்டின் அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காரை நிறுத்துவது தொடர்பாக, பக்கத்து வீட்டுக்காரருக்கும், தவ்பிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டுக்காரருக்கு ஆதரவாக வந்த பலர், தவ்பிக்கிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கும்பல், கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் தவ்பிக் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

Related Stories: