அபுதாபி, துபாயில் இருந்து தங்கம் கடத்திய கேரள வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.54 கோடி மதிப்புடைய 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அபுதாபியில் இருந்து கல்ப் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பக்ரைன் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தேனியை சேர்ந்த அகமது கபீர் (44), சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் புதிய எமர்ஜென்சி விளக்கு கொண்டு வந்திருந்தார். அதை பிரித்து பார்த்தபோது அதில் 23 தங்க கட்டிகள் இருந்தன.

Advertising
Advertising

அதன் எடை 2 கிலோ 680 கிராம். அதன் மதிப்பு ரூ. 1.11 கோடி. அதே விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ஜலீல் (29) வந்திருந்தார். அவர் ஜூஸ் பிழியும் மெஷின் ஒன்று வாங்கி வந்திருந்தார். அதில் 438 கிராம் எடை உடைய தங்க தகடுகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 18.11 லட்சம். இந்நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சராபுதீன் (23), துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு வந்தார். இவர், துபாயில் இருந்து கொண்டு வந்த குக்கரில் 610 கிராம் தங்க துண்டுகளை மறைத்து வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ. 5.22 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: