வாளால் கேக் வெட்டிய வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் அதிரடி கைது

பூந்தமல்லி: மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியை சேர்ந்தவர் காமேஷ் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் ரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது வக்கீல் சின்னம் பொறித்த கேக்கை பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் கேக்கை வெட்டி கொண்டாடினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவானார்கள். இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் வாளால் கேக் வெட்டிய காமேஷ் அவரது நண்பர் முரளி ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கேக் வெட்ட பயன்படுத்திய வாளை பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த வீடியோவில் இருந்த காமேஷின் நண்பர்களான ஐந்து பேரை பிடித்து அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. 6 மாதத்தில் அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: