×

பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் அல்வா கிண்டுதல் நிகழ்ச்சியுடன் பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம்

புதுடெல்லி: பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அல்வா கிண்டுதல் நிகழ்ச்சியுடன் பட்ஜெட்டை அச்சிடும் பணிக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடுதல் பணி தொடங்குவதற்கு முன்பாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி என்ற பெயரில், பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிதியமைச்சக அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கப்படும். ஒரு இரும்பு கடாயில் இனிப்பு தயாரிக்கப்பட்டு கொண்டு வந்து வைக்கப்படும். அதை அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்குவார்.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், அதை அச்சிடும் பணிக்கு அனுப்பும் அல்வா கிண்டுதல் நிகழ்ச்சி, நிதியமைச்சகத்தில் நேற்று நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடாயில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து அனைவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினர். இதைத்தொடர்ந்து பட்ஜெட்டை அச்சிடும் பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

* வெளியே வர முடியாது
பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைச்சகத்தில்தான் தங்க வேண்டும். பிப்.1ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அவர்களது குடும்பத்தினரையும் தொடர்புக் கொள்ள முடியாது.

Tags : Pip , Pip. Federal Budget Filing, Alva Breaking, Concert, Budget Printing
× RELATED வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி