மலேசிய பாமாயில் புறக்கணிப்பு இந்தியாவுக்கு எதிராக பதில் நடவடிக்கை இல்லை: மலேசிய பிரதமர் அறிவிப்பு

லங்காவி: மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள இந்தியாவுக்கு எதிராக, எந்த பதில் நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என மலேசிய பிரதமர் மகதீர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகதீர் விமர்ச்சித்திருந்தார். இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் சந்தையாக இந்தியா இருந்து வருகின்றது. இந்தியாவின் பாமாயில் இறக்குமதி நிறுத்தம் நடவடிக்கை காரணமாக அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியிலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மகதீர், “இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக ரீதியிலான பதில் நடவடிக்கை தரும் அளவுக்கு நாங்கள் மிகப்பெரிய நாடு கிடையாது. நாங்கள் மிகவும் சிறிய நாடு’’ என்றார்.

Related Stories: