சட்டீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் மாநில போலீசார் நக்சல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பசகுடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்சாபூர் மற்றும் டெகுல்குடம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து நக்சல்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பெண் நக்சல் ஒருவர் இறந்து கிடந்தார். மேலும் 3 துப்பாக்கிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

Tags : Chhattisgarh Chhattisgarh , Chhattisgarh, woman Naxal, shot dead
× RELATED தம்மம்பட்டியில் பரபரப்பு...