சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மகர விளக்கு கால பூஜை கடந்த டிசம்பர் 31ம்தேதி தொடங்கியது. மகர விளக்கு பூஜை ஜனவரி 15ம் தேதி நடந்தது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது.
இந்நிலையில் மகர விளக்கு கால பூஜைகள் நேற்றுடன் முடிந்தது.நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அனைவரும் மலையில் இருந்து இறங்கினர். இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 6 மணி அளவில் பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா மட்டுமே தரிசனம் செய்வார். பின்னர் 7 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்.13ல் நடை திறக்கப்படும்.

Tags : Capricorn Pooja ,Sabarimala , Sabarimalai, Capricorn Pooja, completed
× RELATED சபரிமலை மறுசீராய்வு வழக்கு தொடர்ந்து 2வது நாளாக விசாரணை நடக்கவில்லை