புதுச்சேரி சிறை கைதிகளிடம் 11 செல்போன் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகையிலும், ரயில் நிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு வந்தது. விசாரணையில்  கார் திருட்டு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நிதீஷ்குமார் சர்மா (33) என்பவர், அங்கிருந்து செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெரியகடை போலீசார் நிதீஷ்குமார் சர்மா மீது  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை பெற்று நிதீஷ்குமாரை கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறைத்துறை போலீசார் விசாரணை கைதிகள் அறையில் சோதனை நடத்தினர். அப்போது விசாரணை கைதிகள் 8 பேர் பதுக்கி வைத்திருந்த 11 செல்போன், ஒரு சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : prisoners ,Puducherry , Puducherry jail, detainees, 11 cell phones seized
× RELATED திருவேற்காட்டில் கடையின் பூட்டை உடைத்து 4 செல்போன்கள் திருட்டு