சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள்

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த குன்னத்தூர்புதூரை சேர்ந்த 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்த ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த செம்மாண்டபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் (27),  கடந்த 15.02.2017ல் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஓதிமலை என்ற இடத்துக்கு கடத்தி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அன்னூர் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா விசாரித்து, சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Tags : Little girl, kidnapper, rapist, life for the plaintiff
× RELATED தம்மம்பட்டியில் பரபரப்பு...