பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. வாலிபர் கைது

லக்னோ: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்த்ததாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தான் உளவுதுறைக்கு பரிமாற்றப்படுவதாக  தீவிரவாத தடுப்புப்படை மற்றும் ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் வாரணாசியை சேர்ந்த  ரசீத் அகமத் என்பவர் ேநற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்மார்ட்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சிஆர்பிஎப் முகாம் கள், முக்கிய ராணுவ நிலைகள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜென்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், இரண்டு முறை ரசீத், பாகிஸ்தான் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் ஐஎஸ்ஐ ஏஜென்டிடம் இருந்து ரசீத் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் எங்கெங்கு உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் நிலைகளை புகைப்படம் எடுத்துள்ளார் என விசாரணை நடக்கிறது. எவ்வளவு பணம், எதுபோன்ற பரிசு பொருட்களை பெற்றார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: