பிரயாக்ராஜ் பெயர் ஏன்? உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: உபி.யில் அலகாபாத் நகரின் பெயரை, புராணக்காலத்துக்குரிய பெயரான பிரயாக்ராஜ் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த பெயர் மாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் பாரம்பரிய அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு,  பெயர் மாற்றம் தொடர்பாக உ.பி விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: