ட்விட்டரில் காரசாரம் ஜிஎஸ்டி இணையதளம் முடங்கியது

புதுடெல்லி: மாதாந்திர ஜிஎஸ்டி கணக்கு விவரங்களை, ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, கடைசி நாளான நேற்று ஜிஎஸ்டி இணையதளம் முடங்கியது. இதனால் வர்த்தகர்கள் பலர் தங்களின் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் தங்கள் கமென்ட்களை வர்த்தகர்கள் பதிவு செய்தனர். ஜிஎஸ்டியில் பதிவேற்றம் செய்த விவரங்களை சேமிக்க முடியவில்லை. ஒரு முறை பாஸ்வேர்டு (ஓ.டி.பி) வரவே இல்லை.

சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்றுதான் இணையதளத்தில் தகவல் வருகிறது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்து இரண்டரை ஆண்டு கடந்த பிறகும் இப்படி ஒரு நிலையா? என தெரிவித்துள்ளனர். சிலர், கடந்த 10 நாட்களாக இப்படித்தான் உள்ளது, கடந்த 3 நாட்களாக படு மோசம். கணக்கு தாக்கல் செய்யவே முடியவில்லை. இன்று கணக்கு தாக்கல் செய்ய முடியாவிட்டால் தாமத கட்டணம்தான் செலுத்த வேண்டி வரும் போலிருக்கிறது என காரசாரமாகவும், கிண்டல் மற்றும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: