என்னடா இது டெல்லி முதல்வருக்கு வந்த சோதனை: ஊர்வலமாக சென்றதால் தாமதம்...வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலே திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ஊர்வலமாக சென்றதால் தாமதம் ஏற்பட்டதால் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பிச் சென்றார். 70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக  வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் தற்பொழுது ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முழுமையாக 70 சட்டமன்ற பேரவைக்கும் எந்தெந்த வேட்பாளர்கள் என்பதை தேர்வு செய்து அவர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, ஒவ்வொருவராக வேட்பு மனுக்ககளை தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த முறை போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமாக அரவிந்த் கெஜ்ரிவால் இம்முறையும்  போட்டியிடுகிறார்.ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில துணை முதலமைச்சர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை பேரணியாக சென்று தாக்கல் செய்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று பகல் 12 மணியளவில் கன்னாட்பிளேஸ் பகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் திறந்த ஜீப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். டெல்லி வால்மீகி கோவிலில்  இருந்து அனுமான் கோவில் வரை அவர் தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்றார். பேரணி படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் முடிந்தது.

இதற்கிடையே, ஊர்வலம் முடிந்து, வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற கெஜ்ரிவாலுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மாலை 3 மணிக்கு மேல் சென்றதால் அலுவலகம் மூடப்பட்டது. ஊர்வலம் மிக மெதுவாக சென்றதால், மாலை 3 மணிக்கு  பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தை அடைய அவரால் முடிந்தது. அலுவலகம் மூடப்பட்டதால் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலேயே கெஜ்ரிவால் திரும்பிச் சென்றார்.  

ஏமாற்றத்துடன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் எனது வேட்புமனுவை 3 மணிக்கு தாக்கல் செய்ய இருந்தேன். ஆனால், அதற்குள் அலுவலகம் மூடப்பட்டுவிட்டது. அவர்களிடம், ஊர்வலமாக வந்ததால்  தாமதமானதாகவும், அவர்களை விடுத்து எப்படி வருவது என்றும் கூறினேன். நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறேன், என்றார்.

Related Stories: