போலியோ சொட்டு மருந்து போட்ட ஒரு வயது ஆண் குழந்தை சாவு: காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி

காட்டுமன்னார்கோவில்: போலியோ சொட்டு மருந்து போட்டதும் ஒரு வயது குழந்தை இறந்தது காட்டுமன்னார் கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி புத்தூர் அருகே பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது குழந்தை ஹரீஷூக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக டி.மணலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். போலியோ சொட்டு மருந்து போட்டதும் வீட்டுக்கு வந்தனர்.

Advertising
Advertising

இதன்பிறகு சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காலாவதியான  போலியோ சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

Related Stories: