×

நெல்லை, தூத்துக்குடியில் 24ம் தேதி நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆன்லைனில் பதியலாம்

நெல்லை: நெல்ைல, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி, வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளகாப்பு மையம், பாளை. ஜான்ஸ் கல்லூரி, தூத்துக்குடி முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து வனத்துறை நெல்லை கோட்ட ஒருங்கிணைப்புடன் பறவைகள் கணக்கெடுப்பு பணியை 10வது முறையாக நடத்த உள்ளது. இப்பணிக்கு முதற்கட்டமாக 24ம் தேதி மதியம் 2 மணிக்கு பாளை ஜான்ஸ கல்லூரியில் கணக்கு எடுப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

தொடர்ந்து 25, 26ம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் twbc2020@gmail.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 40 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் கூந்தன்குளம், விஜயநாராயணம், ராஜவல்லிபுரம் உள்ளிட்ட குளங்களிலும் தென்காசி மாவட்டத்தில் வாகைகுளம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பன்குளம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், மேலப்புதுக்குடிசுனை, வெள்ளூர் ஆகிய குளங்களில் உள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன. பாளை வேய்ந்தான்குளத்தில் 25 வகையான ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு சில பறவைகள் கூடுகளும் கட்டியுள்ளன. கடந்தாண்டு 44 குளங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 39 ஆயிரத்து 231 பறவைகளும், 75 பறவை இனங்களும் கண்டறியப்பட்டது.

Tags : Paddy ,Thoothukudi , Paddy, Thoothukudi, Birds survey
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...