வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகளில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை: அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியின் வழியாக செல்லும் தேசிய நெஞ்சாலையின் இணைப்பு ரோடுகளில் சோலார் விளக்குகள் அல்லது உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர்-மானாமதுரை வரை தேசிய நெஞ்சாலை ரோடு திருப்புத்தூர் வழியாக செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரேடுகள் ஊர்களுக்குள் செல்வதற்கு இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு ரோடு வருகிறது.

Advertising
Advertising

இந்த இடங்களில் வேகத்தடைகள் கிடையாது. மேலும் இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் ஊரின் பெயர் பலகைகளும் இல்லை. திருப்புத்தூர் தென்மாபட்டி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு ரோட்டில் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம் ரோடு வாணியங்காடு ரோடு, திருப்புத்தூர் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் ரோடுகள் செல்கிறது. இந்த இடத்தில் ஐந்து ரோடுகள் பிரிகின்றன. ஆனால் இந்த இடத்தில் ஒரு மின்விளக்கு கூட இல்லை. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘தென்மாபட்டி தம்மம் குளத்தில் இருந்து மின்விளக்கு இல்லாததால் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.

இது போன்ற விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலை இணைப்பு சாலைகளில் சோலார் விளக்கு அல்லது உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் முக்கியமாக, சாலை சந்திப்பில் ஊரின் பெயர் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: