×

சிறு, குறு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி 28%லிருந்து 18% சதவீதமாக குறைக்க வேண்டும்: தொழிற்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் ஞானசேகரன்

டெல்லி:  மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு மற்றும் குறு தொழிற்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் ஞானசேகரன்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைப்பற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழிற்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் ஞானசேகரன் கூறுகையில், மத்திய நிதியமைச்சருக்கு வணக்கம், வருகின்ற மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சிறு, குறு தொழில்களுடைய  வளர்ச்சிக்காகவும், மேலும் சிறுத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் 5 கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கின்றோம். தயவு செய்து அதனை பரிசீலனை செய்து எங்களுக்கு வாழ்வளியுங்கள் என்கிறார். முதலாவதாக,  ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும். இரண்டாவதாக,  இப்பொழுது தொழில்த்துறை மிகுந்த மந்த நிலையில் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில்  1 வருடத்திற்கு வங்கி கடன்  மற்றும் வட்டி வசூலிப்பதை தள்ளிவைக்க வேண்டும்.

மூன்றாவதாக,  நீங்கள்  ராணுவ மந்திரியாக இருந்தபோது ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக 5 இடங்களை அறிவித்தீர்கள். அதில் ஓசூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை ஆகும். இதில் கோவைக்கு 20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். மற்ற ஊர்களுக்கு 5 கோடி வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்க கேட்டுக்கொள்கிறோம். நான்காவதாக, எங்களுக்கு ஓசூர் ஜோலார்பேட்டை இடையே இரயில் சேவையை உடனடியாக தொடங்க அறிவிப்பை வெளியிட வேண்டும்.  ஐந்தாவதாக, ஒரு தனியார் துறையிலிருந்து ஏர்போர்ட் செயல்பட்டு வந்தது.  தற்பொழுது அவை செயல்படவில்லை. எனவே அதற்கு பதிலாக இங்கு 3000 ஏக்கர் அளவில் அரசாங்க நிலம் இருக்கிறது. இதில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு 5 அம்ச கோரிக்கைகளை தொழிற்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் ஞானசேகரன் அனைவரின் சார்பிலும்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டார்.


Tags : businesses ,GST ,Gnanasekaran ,GNC , Small, Small Business, GST, Joint Secretary, Gnanasekaran
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...