88 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குதிரைப்படை காவல்: மும்பையில் அறிமுகம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: மும்பையில், சுமார் 88 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குதிரைப்படை காவல் பிரிவை அறிமுகம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் அதன் போலிஸ் படையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் பல நாடுகள், அது வளரும் நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் சரி, சட்ட அமலாக்கத்தின் மிக பழமையான முறைகளில் ஒன்றை இன்றும் நடைமுறை படுத்தி வருகின்றனர். அது தான் குதிரை மீது சவாரி செய்து போலிஸார் செய்யும் ரோந்து பணியாகும்.

Advertising
Advertising

இன்று பலவித நவீன வாகனங்கள் வந்துவிட்ட போதிலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ரோந்து செல்ல, போலிஸார் ஏன் குதிரையை பயன்படுத்துகின்றனர். பெரு நகரங்களில் குதிரையின் மீது அமர்ந்து போலிஸார் ரோந்து செல்வதன் முக்கிய நோக்கம். கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதே ஆகும். குதிரைகள் ஒரு குறிப்பிடதக்க உயர ஆதாரத்தை வழங்குகிறது. மேலும் கூட்ட நெரிசலுக்கு சுலபமாக நுழைந்து செல்ல கூடியவை எனவே குதிரை மீது அமர்ந்திருக்கும் காவல் அதிகாரிக்கு கூட்ட நெரிசலை முழுமையாக காணக்கூடிய நிலையையும் சூழ்நிலை விளிபுணர்வையும் அழிகின்றது.

இதனால் கட்டுபாடற்ற கூட்ட நெரிசலை ஒழுங்கமைக்க காவல்துறை அதிகாரிக்கு வசதியாக இருகின்றது. குதிரைகள் ஓர் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதால், கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நெரிசல் நிறைந்த கடை தெருக்கள், நடைபாதைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை செய்ய வாகனங்களை காட்டிலும் குதிரைகளே போலீஸாருக்கு பெரிதும் துணை புரிகின்றன. அவ்விடங்களில் போலிசார். வாகனங்களில் செல்வதால் நெரிசல் மேலும் அதிகமாவதோடு, கூட்டத்தின் ஊடாக போலிஸார் வாகனம் நகர்ந்து செல்வதும் சாத்தியமற்றதாகிவிடும்.

ஆனால் குதிரைகள் எவ்வளவு பெரிய நெரிசல் மிகுந்த பகுதியானாலும் சுலபமாக வழி ஏற்படுத்திக்கொண்டு சாதரணமாக நகர்ந்து கொண்டே இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை கண்காணிப்பதும், கட்டுபடுத்துவதும் காவல் அதிகாரிக்கு எளிதாக இருக்கிறது. மன்னர் கால மற்றும் ஆங்கிலேயர் கால ஆட்சியின்போது இருந்த குதிரைப்படை காவல் பிரிவு, 1932ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு நவீன ஜீப்புகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட குதிரைப்படை காவலர்களை நியமிக்க முடிவுசெய்துள்ள மகாராஷ்டிரா அரசு, வருகிற குடியரசு தின விழாவில் இருந்து அதனை அமலுக்கு கொண்டுவருகிறது.ரோந்து பணிக்காக முதற்கட்டமாக 13 குதிரைகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: