டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல்

டெல்லி:  டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியாக செல்கிறார். 70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் தற்பொழுது ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசு ஆகிய 3 கட்சிகள் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் முழுமையாக 70 சட்டமன்ற பேரவைக்கும் எந்தெந்த வேட்பாளர்கள் என்பதை தேர்வு செய்து அவர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

தற்பொழுது ஒவ்வொருவராக வேட்பு மனுக்ககளை தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில துணை முதலமைச்சர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை பேரணியாக சென்று தாக்கல் செய்த நிலையில்,  தற்பொழுது டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாக இருக்கக்கூடிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்பொழுது தொண்டர்கள் படைசூழ ஏராளமான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்ய, பகல் 12 மணியளவில் கன்னாட்பிளேஸ் பகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் திறந்த ஜீப்பில் கெஜ்ரிவால் வந்தார்.

பேரணி படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் முடிந்தது. ஏற்கனவே கடந்த முறை போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் இம்முறையும் போட்டியிடுகிறார். நேற்றைய தினம் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற பெயரில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னையை கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி அரசு வெளியிட்டது. இதன் அடிப்படியில்தான் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக எங்களுடைய தேர்தல் அறிக்கை இடம்பெறும்  என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  பாரதிய ஜனதா, காங்கிரசு ஆகிய 2 கட்சிகள் இதுவரை முழுமையாக வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில்,  ஆம் ஆத்மி கட்சி சார்பாக  கெஜ்ரிவாலுக்கு அவரது மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா, மகன் புல்கித் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். தொடர்ச்சியாக தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தற்பொழுது பிரச்சாரத்தை ஒரு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

Related Stories: