பிணத்துக்குக் கூட பாதுகாப்பு இல்லை!

நன்றி குங்குமம் முத்தாரம்

திருமணமாகாத ஆண் இறந்துவிட்டால் அவனைத் தனியாகப் புதைக்கக்கூடாது என்பது சீனாவின் நம்பிக்கை. இதற்காக இறந்த பிணத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெண் பிணத்தைத் தேடிப் பிடிப்பார்கள். இதன் பேர் ‘பிண - மணமகள்’ (Corpse bride). பின்பு இரண்டு பிணங்களையும் சேர்த்து வைத்து சில சடங்குகளை முடித்து அரு கருகே புதைத்துவிடுவார்கள். இது அங்கே ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு சடங்கு.

சீனக் குடியரசு உருவான பின் 1949-ல் இந்த நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும் கிராமத்து மக்கள் சிலர் இந்த நடைமுறையை மறக்கவில்லை. பிண-மணமகளுக்கு பதில் பெண் போல ஒரு பொம்மை செய்தோ, படம் வரைந்தோ உடன் வைத்துப் புதைக்கும் பழக்கம் உருவானது. தற்போது சீன கிராமங்களிலும் பணக்காரர்கள் பெருகிவிட்ட நிலையில், ‘‘உண்மையான பிணம் தான் எங்களுக்கு வேண்டும்...’’ என அடம்பிடிக்க ஆரம்பித் திருக்கிறார்கள்.

இது பலருக்கும் அங்கே முழுநேரத் தொழிலாகிவிட்டது. திருமணமாகாத பையன் இறந்துவிட்டால் அவனுக்கு ஜோடிப் பிணம் பிடித்துத் தருவதற்கென்றே பல ஏஜென்ட்டுகள் உருவாகிவிட்டார்கள். வாடிக் கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஃப்ரெஷ் பெண் பிணங்கள் கிடைக்காததால், கல்லறைகளிலிருந்து தோண்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த வகை வியாபாரிகள்.

‘‘கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இங்கே ஐம்பது பிணங் களுக்கும் மேலாக திருட்டு போயிருக்கிறது!’’ என்கிறார் ஷான்ஷி மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர். இதனால், கல்லறைகளுக்கு சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு, கல்லறைத் தோட்டங்களுக்கு சிறப்புக் காவல் என பரபரப்பாகியிருக்கிறது இந்த ஏரியா.

புதைத்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட இவர்கள் விடுவதில்லை. எலும்புகளைத் தோண்டியெடுத்து அவற்றை கம்பிகளால் பிணைத்து, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்காவது பேரம் பேசி விற்றுவிடுகிறார்கள். இளம் பெண் பிணம்தான் வேண்டும் என்று கூடப் பார்ப்ப தில்லை.

டாங்பூ கிராமத்தைச் சேர்ந்த ஜியாங் என்பவர் தன் பாட்டியின் பிணத்தையும், ஹாங்டாங் பகுதியைச் சேர்ந்த குவோ என்பவர் தன் அம்மாவின் பிணத்தையும் பறிகொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்!இந்த விநோத திருமணம் சீனாவின் மட்டுமல்ல, பிரான் ஸிலும் 1959 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவிர, உலகம் முழுவதும் பல நாடுகளில் ரகசியமாக அரங்கேறுகிறது.

Related Stories: