×

துடுப்புத் திமிங்கலம்

நன்றி குங்குமம் முத்தாரம்

நீலத்திமிங்கலங்கள் அதிகபட்சமாக ஒரு போயிங் 737 விமானத்தின் நீளத்திற்கு வளரும். 180 டன் வரை எடை கொண்டிருக்கும். வளர்ந்த திமிங்கலங்கள் நாள் ஒன்றுக்கு 3600 கிலோ எடையுள்ள க்ரில் என்னும் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. சாதாரணமாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நீந்துகின்ற இவை, தேவைப்பட்டால் 30 கி.மீ. வேகத்திலும் நீந்தும்.டால்பின்கள் சிறு திமிங்கல வகைகளில் ஒன்றாகும். 9.5 மீட்டர் நீளம் வரை வளரும்.

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் (Sperm whale) தலை சதுர வடிவமுடையது. இவற்றின் நீண்ட மூக்குப் பகுதியில் காணப்படும் ஸ்பெர்மாஸெட்டி எனும் வெள்ளை மெழுகு போன்ற பொருளுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன.திமில் முகுதுத் திமிங்கலங்களுக்கு (Humpback Whale) நீண்ட துடுப்புகள் உண்டு. இவை 12லிருந்து 16 மீட்டர் நீளமும் 40 டன் எடையும் கொண்டவை. இவ்விலங்கு அதிக ஒலி ஏற்படுத்தக் கூடிய திமிங்கலங்களில் ஒன்றாகும். 5லிருந்து 35 நிமிடங்களுக்கு இசையொலி எழுப்பும்.பார்பாய்ஸ் (Porpoises) எனப்படும் கடற்பன்றிகள் 1.5 மீட்டரிலிருந்து 2.3 மீட்டர் வரை நீளமிருக்கும். இவை 198 மீட்டர் ஆழம் வரை கடலிற்குள் சென்று மீன்களை உண்கின்றன. மீனவர்களால் ‘சிறிய டால்பின்’ என்றழைக்கப்படும் கடல் பன்றிகள் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் நீந்தக்கூடியவை.

துடுப்புத் திமிங்கலம் (Fin Whale) 27.3 மீட்டர் நீளமும் 74 டன்கள் எடையும் கொண்டது. 243 மீட்டர் ஆழத்தில் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில் நீந்தும் ஆற்றல் படைத்தது. முதுகில் முகடு போன்ற அமைப்பு இருப்பதால் இப்பெயர்.சே திமிங்கலம் (Sei Whale) 19 மீட்டர் நீளமும் 28 டன் எடையும் கொண்டது. ஆர்க்டிக் பெருங்கடல் முதல் அண்டார்க்டிக் கடல் வரை இது உலகின் அனைத்து கடல்களிலும் காணப் படுகிறது.ரைட் திமிங்கலம் (Right Whale) இவற்றின் மதிப்பு, மெதுவான இயக்கம், இறந்த பிறகு மிதக்கும் தன்மை ஆகிய காரணங்களால் வேட்டையாடப் பொருத்தமான திமிங்கலம் என்று கருதப்படுகிறது. இது சிறிய, ஓரளவு வளர்ந்த தலைப்பகுதியைக் கொண்டது. இதன் முகவாய்க் கட்டையின் மேல் வளர்ந்துள்ள கடுமையான தொப்பி போன்ற அமைப்பின் மேல் ஓட்டுண்ணிகள் அதிகமாகக் காணப்படும்.
 
அம்புத் தலை திமிங்கலத்தின் (Bow head Whale) தலை கருநீல நிறத்தில் காணப் படும். 14லிருந்து 18.2 மீட்டர் நீளமும் 75லிருந்து 100 டன்கள் எடையும் கொண்ட இது ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகிறது. இதனுடைய வாய்ப்பகுதியில் 3.6 மீட்டர் நீள உறுப்பு விசித்திரமாகக் காட்சி தரும்.வெண் திமிங்கலம் (Beluga) வட்டமான முள் தலையுடன் முதுகுப்புற துடுப்புகளில்லாமல் வெண்மையாகக் காட்சி தரும். BIELO என்ற ரஷ்ய மொழிச் சொல்லுக்கு ‘வெண்மை’ என்பது பொருளாகும். இதிலிருந்தே இது Beluga என அழைக்கப்படுகிறது. மூர்க்கத் திமிங்கலம் (Killer Whales) ஆர்கா எனவும் அழைக்கப்படுகிறது. சீல்களையும் பிற திமிங்கலங்களையும் கொன்று தள்ளக்கூடிய உக்கிரத்தன்மை கொண்ட இவை மனிதர்களைத் தாக்குவதில்லை. இவற்றைப் பிடித்து கடல்சார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் சாகசம் புரிவதற்காகப் பயிற்சி அளிக்கின்றனர்.

புட்டிமூக்கு டால்ஃபின்கள் (Bottlenose Dolphin) 10லிருந்து 25  வரை ஒன்று சேர்ந்து குழுக்களாக நீந்தும். இவற்றின் வாய் வளைவாக அமைந்திருப்பதால் எப்போதும் சிரித்த முகமாகக் காட்சியளிக்கின்றன. புத்திக்கூர்மை படைத்தது என்பதாலும் ஓசை மூலமாகவும், மனிதர்களுடைய செவிப் புலனுக்கு எட்டாத ஒலிக் குறிப்புகள் மூலமாகவும் தம்முள் தொடர்பு கொள்வதாலும் அறிவியல் ஆய்வுகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.சீல், நீரில் வாழும் ஊனுண்ணி உயிரினம். தோலால் பிணைக்கப்பட்ட  துடுப்பு போன்ற பாதங்களும் நீண்ட உடலும் கொண்டவை. காதுகள் கிடையாது. நீரில் பின்னங்கால்களை இருபுறமும் அடித்து நீந்துகின்றன. நிலத்தில் வயிற்றைத் தரையில் அழுத்தி இழுத்து இழுத்து நடக்கின்றன. யானை சீல், துறைமுக சீல், ஹார்ப் சீல், சிறுத்தை சீல், கடல் நாய் (Fur Seal) என சீல்களில் 32 வகைகள் உண்டு.

கடல் சிங்கம், காதுள்ள சீல் போன்ற விலங்காகும்.  இது பசிபிக் கடலின் இரு பகுதி களிலும் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை காணப்
படுகிறது. கடல் சிங்கங்கள் குட்டையான, முரட்டுத்தனமுள்ள முடியினைக் கொண்டவை. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கடல் சிங்கங்களைத் தவிர மற்ற அனைத்து இடங் களைச் சேர்ந்த ஆண் கடல் சிங்கங்களுக்கும் பிடரி முடி உண்டு.கடல் சிங்கங்கள் மணிக்கு 32லிருந்து 40 கி.மீ. வேகத்தில் 304 மீட்டர் ஆழம் வரை நீந்தும். தண்ணீருக்குள் 10லிருந்து 20 நிமிடங்கள் வரை மூச்சைப் பிடித்து இருக்கும் திறன் கொண்டவை. இவை மீன்களை உணவாக உண்கின்றன.

க.ரவீந்திரன்


Tags : Paddle whale
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...