ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதா இன்று தாக்கல்

ஹைதராபாத்:  ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கான தலைநகர் பரவலாக்க மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இவற்றில் அரசு நிர்வாகத்திற்காக விசாகப்பட்டினம், சட்டமன்றத்திற்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்திருக்கிறார். அதன்படி தலைநகர் மாற்றுவது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில தலைநகரை அமராவதிலிருந்து விசாகபட்டினத்திற்கு மாற்ற ஜெகன் மோகன் அரசு தலைநகர் பரவலாக்க மசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய இருக்கிறது.

இதற்கான சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் வரை நடைபெறுகிறது. தலைநகர் மாற்றும் திட்டத்திற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர் கட்சி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு எதிர் குரல்களை நசுக்குவது ஜனநாயத்திற்கு எதிரானது என கூறியிருக்கிறார். மேலும் நாட்டில் அவசர நிலை பிரகடனத்தில் கூட நிலைமை இதைவிட நன்றாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

Related Stories: