×

ஆழ்கடலில் அபூர்வ உயிரினம் : ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பு

உயிரினங்களின் எலும்புகளையும் அதி விரைவாக தின்று செரிமானம் நடத்தும் திறன் படைத்த அபூர்வ இன பிராணிகள் ஆழ்கடலில் இருப்பதை ஆய்வு ஒன்றின் வாயிலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தலா 36 கிலோ எடை உள்ள 3 முதலைகளின் செத்த உடல்களை மெக்சிகோ வளைகுடாவின் 2 கிலோ மீட்டர் ஆழமுள்ள கடற்மணற் பரப்பில் தக்க பாதுகாப்புடன் வைத்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆய்வு செய்ய 51 நாட்களுக்குப் பிறகு கேமரா பொருத்தப்பட்ட ரோபாட்டுகளை அனுப்பினர்.அவற்றின் மூலம் கிடைத்த காட்சிகள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

முதலாவது முதலை உடலை கால்பந்து அளவுள்ள புழுக்கள் அரித்துக் கொண்டிருந்தன. இரண்டாவது முதலை உடலில் அதன் மண்டையோடும் எலும்புகளும் மட்டும் எஞ்சியிருந்தன.

ஆனால் 3 ஆவது முதலை வைக்கப்பட்ட இடம் வெறுமையாக காணப்பட்டது. போதிய பாதுகாப்புடன் வைக்கப்பட்ட அந்த முதலையின்உடலை, இருட்டான ஆழ்கடலில் உள்ள கார்பன் விரும்பி உயிரினங்கள் மொத்தமாக உண்டுவிட்டன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.


Tags : sea ,researchers ,Deep Sea , Deep sea, rare creature, researchers, spotting
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!