சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பஸ்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்: தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை கடிதம்

சென்னை: சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாறுவதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மாதாந்திர பாஸ் திட்டம் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடக்கக்கூடிய கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ரொக்கப்பண பரிவர்த்தனைக்கு பதிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவது நாடு முழுவதும் கட்டாயமாக்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் இம்முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்தை பெருத்தவரையில் மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை கடக்கக்கூடிய அரசு பேருந்துகள் மாதாந்திர பாஸ் திட்டத்தில் தான் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன. இந்த அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியிருக்கிறது. இதனை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. அதில் அரசு பேருந்துகளுக்கு இனி மாதாந்திர பாஸ் திட்டம் கிடையாது. பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும்.

அதாவது பாஸ்டேக் ஐ.டி. முறைக்கு மாற வேண்டும் என்பதை அதில் வலியுறுத்தி இருக்கின்றனர். எனவே அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் மாதாந்திர பஸ்பாஸ் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டு இருப்பதோடு மட்டுமில்லாமல், அனைத்து சுங்கச்சாவடியை கடக்கின்ற அரசு பேருந்துகளிலும் இந்த பாஸ்டேக் அட்டையை ஒட்ட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாஸ்டேக் விவகாரம் தொடர்பாக இதிலிருந்து அரசு பேருந்துகளுக்கு விலக் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனையே தற்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மறுத்துவிட்டது. நாடு முழுவதுமே இதனை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: