ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை:  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.  அதனையொட்டி அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் துவங்கிருக்கிறது. தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோரும், சட்ட பேரவையை சார்ந்த உறுப்பினர்களும் இங்கு வந்திருக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுதான் துவங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகரீதியாக அனைத்து பகுதிகளிலும் பொது கூட்டம் எவ்வாறு நடத்துவது, மேலும் நலத்திட்டங்கள் எவ்வாறு வழங்குவது மற்றும் எவ்விதமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

அதிமுகாவை பொறுத்தவரை தமிழகம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள புதுவை மற்றும் கர்னாடக மாநிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா எவ்வாறு கொண்டாடுவது பற்றியும் ஆலோசித்து கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள மண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டமானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அறிக்கையாகயோ அல்லது செய்தியாளர்களிடமோ, பின்னர் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: