×

குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலை உட்பட சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால்செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும், குடியரசு தினவிழா நடைபெறும் 26ம் தேதியும் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச்சின்னம் வரை, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாறில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அண்ணா சாலை செல்லலாம்.

இதேபோன்று அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பிறவாகனங்கள் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும் எனவும், மயிலாப்பூரிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்திசிலை நோக்கி வரும் பேருந்துகள், அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Traffic change ,places ,Chennai ,change , Republic Day Festival, Rehearsal, Kamarajar Road, Madras, Traffic
× RELATED மேம்பால பணி காரணமாக கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்