×

கருத்துகளை தெரிவிக்க வசதி, பணியாளர்களுக்கு சீருடை தனியார் நிறுவனங்கள் கழிவறைகளை பராமரிக்க பல்வேறு விதிமுறைகள்: சிஎஸ்ஆர் நிதி மூலம் சீரமைக்க மாநகராட்சி அழைப்பு

சென்னை : சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 853 இடங்களில் மாநகராட்சி சார்பில் பொது கழிவறைகள் உள்ளன. இதில் 6641 இருக்கைகள் உள்ளன. இதில் பெரும்பலான கழிவறைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பொது  கழிவறைகளை தனியாரிடம் கொடுப்பது என்று கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.  பல்வேறு காரணங்களுக்கான இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த கழிவறைகள் சிஆர்எஸ் நிதி மூலம் சீரமைக்க வருமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  இதற்காக பல்வேறு விதிமுறைகளையும் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் தங்களின் சமூக ெபாறுப்பு நிதியின் கீழ் கழிவறைகளை சீரமைக்கலாம். நிறுவனங்கள் தேர்வு செய்யும் கழிவறைகளை அவர்களே பராமரிக்க வேண்டும். இதன்படி கழிவறையானது அனைத்து நாட்களும் திறந்து இருக்க வேண்டும். அதற்கான பணியாளர்களே அந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். அவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது. பெண்கள் கழிவறையில் பெண்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கழிவறையை புதுப்பிக்கும் மற்றும் சீரமைக்கும் பணியை அந்த நிறுவனம்தான் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி அனுமதி இல்லாமல் கழிவறையின் வடிவத்தை மாற்றக் கூடாது. எல்லா நேரங்களிலும் போதுமான நீர் கிடைப்பதை சம்பந்தபட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் இல்லாவிட்டால் லாரிகள் மூலம் நீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான செலவுகளை அந்த நிறுவனம்தான ஏற்றுக் கொள்ள வேண்டும். கழிவுநீரானது சென்னை கழிவு நீர் வாரியத்தின் கழிவுநீர் பாதையில் மட்டுமே வெளியேற்ற வேண்டும். செப்டிக் டேங்கை குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகள் அனைத்து சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் படி வெளியேற்றபட வேண்டும். பொதுமக்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான வசதிகள் செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கை மாதம் ஒரு முறை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை ஏற்றுக் கொண்டு கழிவறை புதுப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் வரும் 24ம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்.


Tags : Facilities ,companies ,Align , Various Regulations, CSR Funds, Maintain Toilets
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!