×

வருவாய் கொட்டும் ரயில்வே அரசே கழற்றிவிடுவதா?: கண்ணையா, எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர்

நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் தனியார்மயமாக்குவதற்கு பிபேக் தேப்ராய் கமிட்டி கடந்த 2015ம் ஆண்டு தான் பரிந்துரை செய்துள்ளனர். அதன்அடிப்படையில் தான் அனைத்து பணிகளும் நடக்கிறது. தனியார்மயம் இல்லை என்று அமைச்சர், சேர்மன் சொன்னாலும்கூட லிபரைசேஷன் என்று கூறுகின்றனர். லிபரைசேஷன் என்பதற்கும் தனியார்மயமாக்குவதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. உதாரணமாக ஐஆர்சிடிசி இருக்கின்றது. அது ஒரு கார்ப்பரேசன் நிறுவனம் சம்பந்தப்பட்டது. அதில் எவ்வளவு வருமானம் வருகிறதோ அதில் ஒரு சதவீதம் ரயில்வேக்கு கொடுத்து விடுவார்கள். ஆனால் விலையை அவர்கள் தான் நிர்ணயம் செய்வார்கள். அதனால் ஐஆர்சிடிசிக்கு கொடுத்து இருக்கிறார்கள். தற்போது கூட தேஜஸ் ரயில்கள் ஐஆர்சிடிசிக்கு கொடுத்து இருக்கிறார்கள். டெல்லி-லக்னோ, அகமதாபாத்-மும்பை தேஜஸ் ரயில்களை ஐஆர்சிடிசிக்கு கொடுத்து இருக்கிறார்கள். இதனால் ரூ.835 இருந்து டிக்கெட் விலை ரூ.1600க்கு விற்கிறார்கள். இதனால் லாபம் வருகிறது என்று ரயில்வே நிர்வாகம் கூறுகின்றனர்.

பேருந்தை விட ரயில்களில் 1ல் 3 பங்கு டிக்கெட் குறைவாக இருக்கிறது. 70 சதவீதம் மக்கள் சிலிப்பர் கோச்சை பார்த்ததில்லை. நிறைய மக்கள் முன்பதிவில்லா பெட்டியில் தான் செல்கின்றனர். அதனால் முன்பதிவில்லா வண்டிகள் அதிகம் விடுங்கள். அதை விட்டு விட்டு 150 ரயில்களை வெளியில் இருந்து மேக் இன் இந்தியா என்று சொல்கிறார்கள் ஆனால் அது மேக் இன் இந்தியா கிடையாது. வெளிநாடுகளில் இருந்து 16 பெட்டிகள் கொண்டு வருவார்கள். அதை அவர்கள் தான் இயக்குவார்கள். அதாவது 35 வருடத்திற்கு அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். ரயில்வேயில் லாபம் வராததற்கு காரணம் ரயில்வே தொழிலாளர்கள் கிடையாது. ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதி பேருக்கு சம்பளம் இல்லை. உடனடியாக 50 ரயில்கள், 60 ரயில்நிலையங்கள் தனியாருக்கு விட வேண்டும் என்று கூறுகின்றனர். ஹபித்கேனி என்ற ரயில்நிலையம் வடமாநிலத்தில் உள்ளது. அதை தனியாருக்கு ரூ.360 கோடிக்கு 35 வருடம் காண்ட்ராக்ட் விட்டுள்ளனர். அதில் ரயில்வே ஊழியர்கள் யாரும் கிடையாது. அனைவரும் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் தான் உள்ளனர். கான்டராக்ட் ெதாழிலாளர்கள் இருப்பதால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் தான் கிடைக்கும்.

50 ரயில்களை தனியார்மயமாக்குவதில் நிதிஆயோக் கமிட்டி அறிக்கையில் ரயில் கட்டணத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.இந்த வருடம் டிசம்பர் பட்ஜெட் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி என்று நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் கோடி வந்துள்ளது. அதில் ரூ.47 ஆயிரம் கோடியை கட்டுமான பணி என்ற பெயரில் கொடுத்து இருக்கிறார்கள். ரூ.42 கோடி பென்சனுக்கு கொடுக்கிறார்கள். மீதியை ரயில்வே நிர்வாகத்தில் உள்ள மீதி செலவுகளுக்கெல்லாம் வருகிறது. ரயில்வேக்கு வரும் வருவாயை பார்க்கும் போது தனியார்க்கு விட வேண்டிய அவசியம் இல்லை. இந்த பணத்தை வைத்து இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும். மேலும் தரமான ரயில் பெட்டிகளை தயாரிக்க முடியும். அதற்குரிய தகுதியான ஒர்க்ஸ் ஷாப் நம்மிடம் உள்ளது. எனவே தனியாருக்கு கொடுக்ககூடாது, கார்ப்பரேட்டுக்கு கொடுக்க கூடாது.

நாட்டையை ஒன்றாக சேர்ப்பது ரயில் மற்றும் தபால் துறை தான். இந்த இரண்டும் அனைத்து கிராமங்களுக்கும் செல்கிறது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியை ஒன்றாக சேர்ப்பது ஆகும். வெளிநாட்டு கம்பெனிகளுக்கு குளோபல் டெண்டர் விடப்போகிறார்கள். அதன்படி, ரயில்வே தனியாரிடம் வந்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். ரயில்வே தொழிலாளர்கள் ரயில்வேயில் இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி. எனவே தொடர்ந்து ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தி வருகிறோம். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

Tags : Kannady ,Railways Gain Revenue ,SRMU ,railways ,Kanniya , Revenues, railways, take away? , Kanniya, SRMU General Secretary
× RELATED திருச்சியில் SRMU தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக உண்ணாவிரதம்..!!