தனியார் மயமானால் மக்களுக்கு தான் கஷ்டம்: பி.ஏ.ஜனார்த்தனன், பாரத் பெட்ரோலியம் தொழிலாளர் சங்க மாநில தலைவர்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் என்பது பர்மா ஷேல் ஆயில் ஸ்டோரேஜ் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி என்பது மல்டி நேஷனல் கம்பெனியாக இருந்தது. இந்த  கம்பெனியை மத்திய அரசு 24.1.1976ல் பொதுத்துறை நிறுவனமாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மாற்றினார். தனியார் வசம் இருந்தால் இந்த அரசுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இந்த கம்பெனிகளை பொதுத்துறை ஆக்க பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினார். அதன்பிறகு இந்த பாரத் பெட்ரோலிய நிறுவனம் நன்றாக இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 2002ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது, தனியாருக்கு விட வேண்டும் என்று சொல்லி மிகவும் முயற்சி செய்தனர். அப்போது, இதை எதிர்த்து பொது நல வழக்கு போட்டனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி, தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என்று உத்தரவிட்டார். 2003ல் இருந்து 2019 வரை இந்த அரசு மவுனம் காத்ததால் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்று நினைத்தோம். ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியத்தை ஓஎன்ஜிசியிடம் விற்று விட்டனர். அதன்பிறகு பாரத் பெட்ரோலியத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகின்றனர். பாரத் பெட்ரோலியம் பயங்கரமான லாபகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம். பல ஆயிரம் கோடி நிகர லாபம் இருக்கக் கூடிய நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு பெட்ரோல் விநியோகம் செய்யக்கூடிய இடம் உள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம் உள்ளது. 52 இடத்தில் எல்பிஜி காஸ் நிரப்பும் மையங்கள் உள்ளது. மும்பையில் ஒரு சுத்திகரிப்பு நிலையம், கொச்சியில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. பல கோடி மேல் இந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொத்துக்கள் உள்ளது. பாரத் பெட்ரோலியத்தை தனியாரிடம் கொடுப்பதால் விலைவாசி ஏறும்.

தனியார் மயமாகும் பட்சத்தில், எது லாபகரமாக விற்க கூடிய பொருளாக இருக்கிறதோ அதை மட்டும் தயாரிப்பார்கள்.   இதனால், பொருட்கள் திண்டாட்டம் வரும். இது குறித்து மத்திய அரசு கேட்டால் எந்த பொருட்கள் விற்றால் லாபம் வரும் என்று எனக்கு தெரியும் என்று தனியார் நிறுவனம் கூற வாய்ப்புள்ளது. இன்று பாரத் காஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானியம் தருகிறது. இது, தனியாரிடம் சென்றால் மானியம் வராது. பாரத் பெட்ரோலியத்தில் பல்வேறு வகுப்பினர் வேலை செய்கின்றனர். ஆனால், தனியாரிடம் சென்றால் இட ஒதுக்கீடு இருக்காது. ஏற்கனவே வேலை செய்வோருக்கு வேலை நீடிக்குமா, இப்போது வாங்குகிற சம்பளம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்களது ஓய்வு வயது 60. ஆனால், தனியாரிடம் சென்றால் ஓய்வு வயது 58, 55 ஆகக்கூட குறைய வாய்ப்புள்ளது. பல விதமான இழப்புகள் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நிகழ போகிறது. இப்போது கிராமத்தில் பெட்ரோல் பங்க்கு உள்ளது. ஆனால், தனியாரிடம் சென்றால் லாபகமில்லாத அந்த கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மூட வாய்ப்புள்ளது.

கேரளாவில் தினமும் தனியார் மயத்தை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி கூட போராட்டத்தில் கலந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆதரவு வேண்டுமோ அதை நாங்கள் கொடுப்போம். கொச்சியில் ஒவ்வொரு வீட்டில் ஒருவர் வேலை பார்க்கின்றனர். இந்த கொச்சி சுத்திகரிப்பு நிலையம் தனியாரிடம் சென்றால் அவர்கள் வேலை வாய்ப்பு இழக்க வாய்ப்புள்ளது.

Related Stories: