மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம்: சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. திமுக பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் ஆக்கப்பணிகள் பொருள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: