சிஏஏ, என்ஆர்சி தேவை இல்லாதது: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கருத்து

அபுதாபி: ‘இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்கள் தேவையில்லாதது,’ என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சில நாட்களுக்கு முன், இது தொடர்பாக பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமேன், ‘குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதே நேரத்தில் இவற்றால், அந்நாட்டில் உறுதியற்ற நிலை ஏற்பட்டால் அது அண்டை நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும்,’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. ஆனால், இந்திய அரசு இதை ஏன் செய்தது என்பது புரியவில்லை. அது தேவை இல்லாதது. இந்தியாவில் இருந்து யாரும் வங்கதேசத்துக்கு மீண்டும் திரும்பவில்லை. ஆனால், இந்தியாவுக்கு உள்ளேயே மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்,” என்றார்.


Tags : Sheikh Hasina ,Bangladesh ,CAA ,NRC , CAA, NRC, lack of demand, Sheikh Hasina, Prime Minister of Bangladesh, Opinion
× RELATED பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில்...