சீன ஆளுங்கட்சியை புறக்கணிக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் போராட்டம்

ஹாங்காங்: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் நேற்று போராட்டம் நடந்தது. ஹாங்காங்கில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்தி தாய் நாடான சீனாவிடம் ஒப்படைக்கும் கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து வார இறுதி நாட்களில் அவர்கள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் போலீசார் ஒடுக்குமுறையில் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தம் மற்றும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்றும் பிரமாண்ட போராட்டம் நடந்தது. சாடர் பூங்காவில் திரண்ட மக்கள், சுதந்திர ஹாங்காங் தேவை என கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்துக்கு ஹாங்காங் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் பேரணியாக செல்வதற்கு அனுமதி தரவில்லை. போராட்டக்காரர்களால் பூங்கா நேற்று நிரம்பி வழிந்தது.

Related Stories: