தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் ஏமனில் 80 வீரர்கள் பலி

துபாய்: ஏமன் நாட்டில் மசூதி மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 80 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டில் ஈரான் அரசு ஆதரவுடன் ஹவ்தி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது ஏமன் அரசு படைகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மசூதி மாரீப் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் அமைந்துள்ளது. அதில், நேற்று முன்தினம் மாலை வீரர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலமாக மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஏமன் அரசு படையை சேர்ந்த 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், காயமடைந்த பலர் மாரீப் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஏமன் அதிபர் அபேத் ராப்போ மன்சூர் ஹாதி கூறுகையில், “காட்டுமிராண்டிதனமான இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். அமைதியை எட்ட முடியாத நிலையில் ஹவ்தி தீவிரவாதிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்,” என்றார்.

Related Stories: