ஜிஎஸ்டி வருவாய் இலக்கு அதிகரிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வசூல் இலக்கை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் ஆனதில் இருந்து, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை. மாதாந்திர ஜிஎஸ்டி சராசரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை 9 மாதம் மட்டுமே இந்த இலக்கை தாண்டி வசூல் ஆகியுள்ளது. வசூல் குறைந்ததால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமல் படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடு தொகையை மத்திய அரசால் தர இயலவில்லை. இதனால், டிசம்பரில் இந்த இலக்கை மத்திய அரசு ரூ.1.1 லட்சம் கோடியாக உயர்த்தியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் அடுத்த 2 மாதங்களுக்கான இலக்கை பிப்ரவரிக்கு ரூ..15 லட்சம் கோடியாகவும், மார்ச்சுக்கு ரூ.1.25 லட்சம் கோடியாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

Related Stories: