தென் ஆப்ரிக்கா பாலோ ஆன் பெற்றது

போர்ட் எலிசபத்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி பாலோ ஆன் பெற்றது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 499 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டோக்ஸ் 120, போப் 135* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டி காக் 63, எல்கர் 35, பிலேண்டர் 27, வான் டெர் டஸன் 24, மாலன், நோர்ட்ஜே தலா 18 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பெஸ் 5, பிராடு 3, சாம் கரன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 290 ரன் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: