×

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய குண்டு தீவிரவாதி கைது: லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்

மொசூல்: ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேசி வந்த 250 கிலோ எடை  கொண்ட ஐஎஸ் மதபோதகர் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பின்  முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி இருந்து வந்தார். 250 கிலோ எடை  கொண்ட இவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. இதனால், படுக்கையில்  இருந்தபடியே பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில்  பேசி வந்தார். ஐஎஸ் அமைப்புக்கு கட்டுப்படாத, விசுவாசத்துடன் நடந்து  கொள்ளாத மத போதகர்களை கொல்லவும் உத்தரவிட்டு வந்தார்.

இந்நிலையில்,  ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் எனப்படும் சிறப்பு ஆயுதப்படை  குழுவினர் நேற்று முன்தினம் அவரை மொசூல் நகரில் உள்ள அவரது வீட்டில் கைது  செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட முப்தியை அவர்களால் போலீஸ்  வாகனத்தில் ஏற்ற முடியவில்லை. இதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்த  நிலையில், அதிக உடல் எடையுடன் இருந்ததால் அவரை லாரியில் ஏற்றி கொண்டு  சென்றனர். முப்தி பாரி சமூக வலைதளங்களில் `பருமனான தீவிரவாதி என்றே அழைக்கப்படுகிறார்.

Tags : Iraq ,bomb Terrorist , Iraq, bomb terrorist, arrested
× RELATED 85 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்