முதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர்  பன்வாரிலால்  புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு   நடைபெறுகிறது. இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஏற்கனவே,   அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாைள மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறை படுத்துவது, பதிவு கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள்   குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறது. மேலும், தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: