×

3-வது ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதம் விளாசல்: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

3-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை இந்தியா அணி கைப்பற்றியது. இந்திய வீரர் ரோகித்  சர்மா அதிரடி சதம் விளாசினார்.

3-வது ஒருநாள் போட்டி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்கியது.

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு:

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 50 ஓவர்கள் முடிவில், 9  விக்கெட்கள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) மற்றும் வார்னர் களமிறங்கினர். ஆனால், 7 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி ஓவரில் வார்னர்  ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேப்டன் ஆரோன் பிஞ்சுக்கு ஸ்மித் கை கொடுத்தார். ஆனால், கேப்டன் ஆரோன் பிஞ்ச், 26 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 64  பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய, மிட்செல் ஸ்டார்க் 3 பந்துகளில் ரன்கள் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ஸ்மித்துடன் கை கொடுத்த கேரி 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இறங்கிய டர்னர் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதற்கிடையே, சதம் அடித்து விளையாடி வந்த  ஸ்டீவ் ஸ்மித் 132 பந்துகளில் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டிகளில் ஸ்மித் 4000 ரன்களை கடந்த பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, விக்கெட்களை இழந்து வந்த நிலையில்,  களமிறங்கிய கம்மின்ஸ் 1 பந்தை எதிர்கொண்டு ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸம்பா 6 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும், குல்தீப் மற்றும்  சைனி தலா 1 விக்கெட்களும் எடுத்தனர். 287 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடரை கைப்பற்றிய இந்திய அணி:

இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஆனால், 27 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித்  சர்மாவுடன் கைகோர்க்க அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 110 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா, 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 29-வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, 61 பந்துகளில் 52  ரன்கள் எடுத்து கேப்டன் விராட் கோஹ்லி, அரைசதம் விளாசினார். ஆனால், 128 பந்துகளில் 119 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோஹ்லி ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், கேப்டன் விராட் கோஹ்லியுடன்  ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், கேப்டன் விராட் கோஹ்லி 91 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மணிஷ் பாண்டியா களமிறங்க, 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அதனைபோல், ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. தொடர்ந்து, 47.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து தொடரை இந்திய அணி கைப்பற்றியது.


Tags : India ,Rohit Sharma Chattas Vazal ,Australia ,Rohit Sharma Action Century , 3rd ODI: Rohit Sharma Action Century: India beat Australia by 7 wickets
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1