×

மண்டைக்காடு மாசி கொடை விழாவுக்கு முன் திங்கள்நகர் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும்

திங்கள்சந்தை: திங்கள்நகர் பேருந்து நிலையம் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. போதிய இட வசதியின்மை மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் என்பதால் இந்த பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பிரின்ஸ் எம்எல்ஏ சட்டமன்றத்தில் அதிநவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன்படி புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.5.75 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.

பின்னர் பழைய பேருந்து நிலைய கட்டிடம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கியது. தற்போது இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழாவுக்கு முன் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேரூர் காங்கிரஸ் தலைவர் பீட்டர்தாஸ் கூறுகையில், இந்த மாதத்துக்குள் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடித்து, மாசி கொடை விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை பொது ஏலம் விட்டு உடனடியாக திறக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பெற்று தருவதாக சிலர் வியாபாரிகளிடம் பேரம் பேசி பெருந்தொகையை வசூலித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : festival ,Open Monday Bus Stand , Mandakkad, Masi Donation Festival, Monday Bus Stand
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...