தொழில்நுட்ப காரணமாக வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்: உலகளவில் #Whatsappdown ஹேஷ்டேக் டுவிட்டரில் முதலிடம்

லண்டன்: உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களில் 90 சதத்துக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் மெசேஜ் ஆப் பயன்படுத்திவருகின்றனர். தொடக்கத்தில் அதன் பயன்பாடு எழுத்து மெசெஜ் அனுப்புவதாக மட்டும் இருந்த நிலையில் தற்போது புகைப்படங்கள், வீடியோ போன்றவை அனுப்பவதிலும் வாட்ஸ்அப் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தநிலையில் கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப்பில், வீடியோ, போட்டோ, குரல் பதிவு போன்றவை அனுப்ப முடியாத சூழல் உள்ளது. வாட்ஸ்அப்புக்கான Downdetector-ல் மாலை 4.50 மணியிலிருந்து வாட்ஸ்அப் செயல்பாட்டில் பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், வீடியோ, புகைப்படம் பகிர முடியாமல் வாட்ஸ்அப் பிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், இந்திய அளவில் ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பலரும், வாட்ஸ்அப் பாதிப்பு குறித்த தங்களது கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

Related Stories: