இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் சென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி:

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா பேட்டிங் செய்தது. இறுதியில் 49.1 ஓவர்களில் இந்திய அணி அனைத்து  விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 256 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்நிலையில் 256 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 341 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: