×

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை: தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை

டெல்லி: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்று தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை வழங்கியுள்ளது. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதில் இருந்தும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் விவசாயிகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 341 கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே அளித்துள்ளது. வேதாந்தா நிறுவனம் ஓ.என்.ஜி.சி இனைந்து ரூ.20,000 கோடியில் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் கடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படக்கூடிய இடங்களில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்துக் கொடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.



Tags : government ,company , Hydro-carbon,exploration, well, required
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...