×

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும்.

இதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிற்று கிழமையுடன் முடிவடைகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 380 ரூபாய் கோடி வரை மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags : Pongal , At Pongal, wine sales,10% higher,last year,606 crore
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா