நல்லம்பள்ளியில் நெல் அறுவடை பணி தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் விவசாயத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியன முக்கிய சாகுபடியாகும். நெல் பயிரிடுவதில் அனைத்து பகுதி மக்களும் ஆர்வமுடன் ஈடுபடுவர். தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நெல் சாகுபடி 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்படுகிறது. நல்லம்பள்ளி, கோவிலூர், நார்த்தம்பட்டி, இலளிகம், தம்மணம்பட்டி, கம்மம்பட்டி, கொமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில், சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் பயிர்கள் கடந்த 2 நாட்களாக அறுவடை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.  

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நல்லம்பள்ளி பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் பொன்னி நெல் சாகுபடி செய்துள்ளோம். நடப்பாண்டு அம்மன் பொன்னி ரகம்நடவு செய்தோம். நடப்பாண்டில் மழை நன்கு பெய்ததால், கோவிலூர் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் மூலம் நெற்பயிர் வழக்கத்தை விட நன்கு கதிர் பிடித்துள்ளது. நடப்பாண்டில் பருவமழை நன்றாக தொடர்ந்து பெய்ததால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என கூறினர்.

Related Stories: