நெட் தேர்வில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நீதித்துறை இணைந்து தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகை வழங்கி வருகின்றன. இந்நிலையில் 2018-19, 2019-20 கல்வியாண்டிற்கான தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பயின்று வருவோர் இதற்காக விண்ணப்பிக்கலாம். https://www.ugc.ac.in/ugc_schemes/ என்ற இணையதள பக்கத்தில் இதற்காக பிப்ரவரி 29ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ளதாக கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளிடமிருந்து உதவித்தொகை பெறுபவர்கள் மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.

Related Stories: