×

‘பாஸ்டேக்’ முறையில் சுங்கக்கட்டணம் அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு வந்தது: விரைவான பயணத்தால் மக்கள் நிம்மதி

சென்னை: ‘பாஸ்டேக்’ முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பஸ்கள் பயணிப்பதால், பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு முறையும் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்தியேகமாக ‘பாஸ்டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு ‘பாஸ்டேக்’ கார்டை பயன்படுத்த வேண்டும்.

இந்தகார்டானது அனைத்து சுங்கச்சாவடி, சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அந்த கார்டை வாகனத்தில் கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரீசார்ஜ் செய்யப்பட்ட கார், எந்த சுங்கச்சாவடியில் நுழைந்தாலும் அப்போது, அங்கு ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இயந்திரம் கண் இமைக்கும் ெநாடியில் காரின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும். பிறகு நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து, அந்த சுங்கச்சாவடியை நாம் பயன்படுத்தியதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு விடும். பிறகு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு கம்பியும் தானாகவே திறந்து கொள்ளும். ஆனால் இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் டிசம்பர் முதல் அமல்படுத்தப்பட வேண்டிய திட்டம், கடந்த 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு, பிறகு அமலுக்கு வந்தது.
 இதையடுத்து வாகன ஓட்டிகள் பலர் சம்மந்தப்பட்ட முறையில் சுங்கக்கட்டணத்தை செலுத்த துவங்கி விட்டனர். குறிப்பாக சொந்தமாக கார்களை வைத்திருப்போர் கடந்தமாதம் முதல் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அரசு பஸ்களும் இந்தமுறையில் சுங்கக்கட்டத்தை செலுத்துவதற்கான ஏற்பாட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதன்விளைவாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்கள், தங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை பாஸ்டேக் முறையில் செலுத்த துவங்கிவிட்டனர். இதனால் எந்த இடத்திலும் நிற்காமல் அரசு பஸ்கள் தற்போது பயணிக்கிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலானவை ‘பாஸ்டேக்’ முறையில் சுங்கக்கட்டணத்தை செலுத்த துவங்கிவிட்டனர். இதற்காக சம்மந்தப்பட்ட பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பஸ்கள் எந்த சுங்கச்சாவடியிலும் நிற்காமல் செல்கிறது. குறிப்பாக ெபாங்கல் பண்டிகைக்கு முன்னதாக இந்த ஸ்டிக்கர் பஸ்களில் ஒட்டப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, எந்த சுங்கச்சாவடியிலும் நிற்காமல் அரசு பஸ்கள் பயணித்தது. இதனால் எங்கும் போக்குவரத்துநெரிசலில் அரசு பஸ்கள் சிக்கவில்லை. இது பயணிகளிடத்தில் நல்ல வரவேற்ைப ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

Tags : trip , Customs duty , implemented , government buses
× RELATED சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!