திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதில் சாதாரண நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய உற்சவ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகின்றனர்.இந்நிலையில், விடுமுறை நாட்கள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் நேற்று 74 ஆயிரத்து 548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி டிபிசி பாலம் வரை காத்திருக்கும் பக்தர்கள், 20 மணி நேரத்துக்கு பின்தான் தரிசனம் செய்து வருகின்றனர். சர்வ தரிசனத்திற்காக ஆதார் அட்டை மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களும், மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்ெகட் பெற்ற பக்தர்களும் 4 மணிநேரம் காத்திருந்தும், 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்தும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் 2.12 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Related Stories: