35 ஆண்டுக்கு பிறகு புதிய வடிவில் மாருதி 800

மாருதி நிறுவனத்தில் இருந்து 1984-ம் ஆண்டில் எஸ்.எஸ் 800 என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட 800 மாடலின் முதல் தலைமுறை கார் தற்போதைய லேட்டஸ்ட் கார்களுக்கு இணையாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த 800 மாடலின் வெளிப்புற சிவப்பு நிற பெயிண்ட் அமைப்பு, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல் மற்றும் டெயில்லைட் உள்ளிட்டவற்றில் மாடர்ன் தொடுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஒரிஜினல் மாருதி 800-ல் 12 இன்ச் இரும்பு சக்கரம்தான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இருக்கைகள் காரின் ரூப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதே லெதரால் மூடப்பட்டுள்ளன.இந்த காரில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயங்களாக முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் போன்றவை புதியதாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. காஸ்மெட்டிக் மாற்றங்களைவிட இயந்திர பாகங்களில் பல அப்டேட் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரிஜினல் 800 மாடலின் 796 சிசி இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், காரின் கார்புரேட்டார், எம்பிஎப்ஐ சிஸ்டத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் எஸ்எஸ்80-ஐ விட பழமையான மாடலான ருனாபோட்டில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எம்பிஎப்ஐ வெர்சனுக்கு மாற்றப்பட்ட கார், கார்புரேட்டட் வெர்சனில் வெளிப்படுத்திய 35 பிஎச்பி ஆற்றலைவிட அதிகமாக 45 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகளவில் இந்த காரில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இந்த கார் 6 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1984-ம் ஆண்டில் மாருதி 800 மாடலின் முதல் தலைமுறை கார் 52,500-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்-6 மாடல் அறிமுகம்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. முதல் மாடலாக தனது அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளின் பிஎஸ்-6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு 1.65 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய பிஎஸ்-4 மாடலைவிட விலை 11,000 அதிகம். சிக்னல்ஸ் ஏர்போர்ன் புளூ, சிக்னல்ஸ் ஸ்டோர்ம்ரைடர் சேண்ட், கன்மெட்டல் க்ரே மற்றும் கிளாசிக் பிளாக் ஆகிய வண்ணத்தேர்வுகளில் வந்துள்ளது தவிர, ஸ்டீல்த் பிளாக் மற்றும் க்ரோம் பிளாக் என்ற இரண்டு புதிய வண்ணத்தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த பைக்கில், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் ₹10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் வேண்டுமா? வீடு தேடி வருகிறது நிஸான் கிக்ஸ்

ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், சமீபத்தில் அதன் கிக்ஸ் என்ற புதிய எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது, இந்த காரை இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பீட்ஸா மற்றும் பர்கரை போன்று இனி டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் காரும் உங்களை தேடி வர இருக்கிறது. இந்த சேவைக்காக நிஸான் நிறுவனம் ஓரிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இது, உலகளவில் வாடகை வாகனங்களுக்கு புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். இதனால், வாடிக்கையாளர்கள் ஷோரூம் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

நிஸான் நிறுவனத்தின் இந்த சேவையை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெற முடியும். இதற்கான முன்பதிவை ‘’நிஸான்.இன்’’ என்ற வலைதள பக்கத்தில் செய்யவேண்டும். மேலும், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பரிமாறினால் போதுமானது. நிஸான் ஊழியர்கள் உங்களை தேடி, புதிய கார்களை கொண்டு வருவார்கள். அது வீடாக அல்லது அலுவலகமாக இருந்தாலும் சரி. நிஸான், அதன் கிக்ஸ் எஸ்யூவி ரக காரை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் அது தற்போது ஆயத்தமாகியுள்ளது.

அசத்தும் சோனி எலெக்ட்ரிக் கார்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி (CES) நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில், கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களும் வெளியிடப்படுவது வழக்கம். எனவே, சிஇஎஸ் கண்காட்சி மீது கார் தயாரிப்பு துறையினர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடப்பாண்டிலும், வழக்கம்போல் இந்த மின்னணு சாதன கண்காட்சியில் கார் சம்பந்தப்பட்ட ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கண்காட்சியில், டிவி., ஸ்மார்ட்போன், கேமரா மற்றும் வீடியோ கேம் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் சோனி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்திய விஷயம் எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.‘’சோனி விஷன் எஸ் கான்செப்ட்’’’’ என்ற பெயரில் இப்புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரி மாடலை காட்சிப்படுத்தி உள்ளது சோனி நிறுவனம். இந்த காரின் முன்புறம் போர்ஷே கார்களின் டிசைன் அம்சங்களை நினைவூட்டுவதாக உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. மிக அசத்தலாக உள்ள இந்த காரின் உட்புறமும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. அதிக இடவசதியுடன் வேற லெவலில் காட்சியளிக்கிறது. டேஷ்போர்டு முழுவதும் பல மின்னணு திரை அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அரை நிமிடத்தில் இந்த கார் அறிமுக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டது சோனி நிறுவனம். அதாவது, இந்த கார் குறித்த தகவல்களை தற்போது முழுமையாக வெளியிட சோனி நிறுவனம் விரும்பவில்லை. எனினும், எதிர்காலத்திற்கு தேவையான சிறந்த போக்குவரத்து தீர்வாக இந்த மின்சார கார் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் 33 சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, பல்வேறு தானியங்கி கட்டுப்பாட்டு வசதிகளையும், பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

பின்புற இருக்கைகளுக்கும் டிவி திரைகள், ஆர்ம் ரெஸ்ட்டில் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் நேரடி இன்டர்நெட் வசதியுடன் பல்வேறு செயலிகளை இயக்க முடியும். இந்த கார் மாடலை, ஆட்டோமொபைல் துறை நிறுவனமான மேக்னா உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலும் புதிய கட்டமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், லிடர் மற்றும் டைம் ஆப் பிளைட் கேமரா தொழில்நுட்பங்களிலும் அதிகளவில் முதலீடு செய்து, எதிர்கால போக்குவரத்து சாதனங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்ட உள்ளது சோனி.

சோனி உருவாக்கி வரும் புதிய ‘’லிடர்’’’’ தொழில்நுட்பம் மூலமாக காரை சுற்றிலும் உள்ள வாகனங்கள், தடைகள், விலங்குகளை முப்பரிமாண முறையில் கண்டறிந்து பாதுகாப்பாக இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். டைம் ஆப் பிளைட் தொழில்நுட்பம் மூலமாக கேபினில் உள்ள பயணிகள் மற்றும் பொருட்களை உணர்ந்து கொண்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவு கட்டுப்பாட்டு வசதிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் உதவும். இந்த காரின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால், நிச்சயம் ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி.

டெஸ்ட் டிரைவ் வேண்டுமா? வீடு தேடி வருகிறது நிஸான் கிக்ஸ்

ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், சமீபத்தில் அதன் கிக்ஸ் என்ற புதிய எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது, இந்த காரை இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பீட்ஸா மற்றும் பர்கரை போன்று இனி டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் காரும் உங்களை தேடி வர இருக்கிறது. இந்த சேவைக்காக நிஸான் நிறுவனம் ஓரிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இது, உலகளவில் வாடகை வாகனங்களுக்கு புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். இதனால், வாடிக்கையாளர்கள் ஷோரூம் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

நிஸான் நிறுவனத்தின் இந்த சேவையை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெற முடியும். இதற்கான முன்பதிவை ‘’நிஸான்.இன்’’ என்ற வலைதள பக்கத்தில் செய்யவேண்டும். மேலும், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பரிமாறினால் போதுமானது. நிஸான் ஊழியர்கள் உங்களை தேடி, புதிய கார்களை கொண்டு வருவார்கள். அது வீடாக அல்லது அலுவலகமாக இருந்தாலும் சரி. நிஸான், அதன் கிக்ஸ் எஸ்யூவி ரக காரை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் அது தற்போது ஆயத்தமாகியுள்ளது.

Related Stories: