சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கான தடகளம் நாளை தொடக்கம்

சென்னை: பள்ளி மாணவிகள் பங்கேற்கும் மாநில அளவிலான  தடகளப் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.இதுகுறித்து சென்னை எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர் அமுதா சுமன்குமார்  செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வளரும் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க எங்கள் கல்லூரி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டும் மாநில அளவிலான தடகள போட்டியை நடத்த உள்ளோம்.இப்போட்டி, நேரு விளையாட்டரங்கில் ஜன. 20, 21 தேதிகளில் நடைபெறும். 50 பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவிகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகள்  9, 10ம் வகுப்பு மாணவிகளுக்காக சீனியர் மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்காக சூப்பர் சீனியர் என 2 பிரிவுகளாக நடத்தப்படும். வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளுடன் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்படும்.

Tags : Schools ,Nehru Stadium ,Chennai Nehru Stadium for Schools of Athletics ,Chennai , Athletics , Schools , Nehru Stadium, Chennai
× RELATED தடகளப் போட்டிகளில் கிரேஸ் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்