குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பாா்ஸிக்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகளும், சில பல்கலைக்கழக மாணவா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டது. எந்த வன்முறையால் பலர் உயிரிழந்தனர். மேலும் அரசு சொத்துக்கள், வாகனங்கள் போன்றவை தீக்கு இரையானது. இதனையடுத்து சில மாநில அரசுக்கள் இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவும், சில மாநில அரசுக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, இடதுசாரிகள் ஆளும் கேரளா சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநிலத்தை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: